சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      இந்தியா
Modi 2020 12 14

Source: provided

புதுடெல்லி : சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய பொம்மை கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களான பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், இந்திய பொம்மைகளின் உலகளாவிய சந்தையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் ‘இந்திய பொம்மை கண்காட்சி 2021- நேற்று தொடங்கப்பட்டது. மார்ச் 2-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. 

இந்நிலையில், இக்கண்காட்சியை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 

இந்தியர்களின் வாழ்க்கை முறையில் அங்கமாக உள்ள மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை நமது பொம்மைகள் பிரதிபளிக்கின்றன. பெரும்பாலான இந்திய பொம்மைகள் இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. அதற்கு பயன்படுத்தப்படும் நிறங்களும் இயற்கையான மற்றும் பாதுகாப்பானது.

சுற்றுச்சூழலுக்கும், உளவியலுக்கும் நன்மையளிக்கூடிய பொம்மைகளை உருவாக்க வேண்டும் என பொம்மை தயாரிப்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மறுசுழற்சிக்கு பயன்படும் வகையிலான மற்றும் குறைந்த அளவிலான பிளாஸ்டிக்கை பொம்மை தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து