2-ம் கட்டப் பணி துவக்கம்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டார்

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      இந்தியா
Naveen-Patnaik 2021 01 08

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2-ம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நேற்று போட்டுக் கொண்டார். இதற்குமுன், பிரதமர் மோடி நேற்று காலை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து