ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு குஜராத்தின் கேவடியாவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மனிதவள பிரச்சினைகள் தொடர்பான குறிப்பிட்ட சில அமர்வுகளில் முதல் முறையாக இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த உயர் அதிகாரிகளின் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் ராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.