Idhayam Matrimony

மொயின் அலி குறித்து தஸ்லிமா தெரிவித்த கருத்தால் சர்ச்சை

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரும் சி.எஸ்.கே வீரருமான மொயின் அலி குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி ஐ.பி.எல் 2021 தொடரில் சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ளார். மொயின் அலி தனது ஜெர்சியில் இருக்கும் மதுப்பான லோகோவை நீக்க சொன்னார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதுப்போன்று அவர் எந்த கோரிக்கையும் மொயின் அலி வைக்கவில்லை என்று சிஎஸ்கே தெரிவித்தது. இந்த தகவல் வெறும் வதந்தி என்று கூறி மொயின் அலி குறித்த செய்திகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி வைத்தது.

தற்போது மீண்டும் மொயின் அலி வைத்து சர்ச்சை கிளம்பி உள்ளது. மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து தற்போது மீண்டும் சர்ச்சயைாகி உள்ளது. தஸ்லிமா தனது ட்விட்டரில், மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமல் இருந்தால், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

தஸ்லிமாவின் இந்த கருத்து  கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு தெரிந்து நீங்கள் நலமாக இல்லை என்று நினைக்கிறேன் என்றுள்ளார். இங்கிலாந்து வீரர்கள், மொயின் அலி தந்தை என பலர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தஸ்லிமா தனது கருத்திற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், என்னை வெறுப்பவர்களுக்கு தெரியும் நான் மொயின் அலி குறித்து பதிவிட்ட கருத்து இயற்கையாகவே கிண்டலானது தான். 

ஆனால் அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள், இஸ்லாமிய வெறித்தனத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் என்னை அவமானப்படுத்தும் ஒரு பிரச்சினையாக அவர்கள் செய்தார்கள். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது என்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து