முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம், பழனியில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 4 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து