முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும் என்று தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு இன்று பிறக்கிறது.  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், 

தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு புத்தாண்டின் விடியல் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது.  கொரோனா தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் திருவிழாவை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  தமிழ் புத்தாண்டு சித்திரை 1, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நேரத்தில் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிடவும் இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும் என்று கூறியுள்ளனர்.

இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநா யக கட்சி நிறுவனர் பாரி வேந்தர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், வி.ஜி.பி. நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோசம், இயேசு அழைக்கிறார் நிறுவனர் பால்தினகரன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து