முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா : அகிலேஷ் யாதவுக்கும் தொற்று உறுதி

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2021-ம் ஆண்டிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. சாமானிய மக்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆரம்பித்த கொரோனா பரவல், கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து விட்டன. அதற்குள் கொரோனாவின் 2-ம் அலை மீண்டும் மக்களை புரட்டிப் போட்டு வருகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில், பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதியாகி உள்ளது. என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். நான் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பு கொண்டவர்களிடம் தங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து