முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளி ஆட்களை கூட்டி வந்து கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டனர்: மம்தா தாக்கு

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வெளியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து நோயைப் பரப்பி விட்டு ஓடிப் போய் விட்டார்கள் என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 5-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,  வடக்கு பெங்காலின் ஜல்பாய்குரி பகுதியில் அக்கட்சி வேட்பாளர் டாக்டர் பிரதீப் பர்மாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால், பிரதீப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் பிரச்சார மேடையில் இடம்பெறவில்லை. அப்போது மம்தா பேசியதாவது:- 

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் கொரோனா பரவுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம். கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் (பா.ஜ.க.) எங்கிருந்தீர்கள்? தேர்தல் அறிவித்தவுடன் பிரசாரத்துக்காக வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டி வந்து விட்டு, கொரோனாவைப் பரப்பி விட்டு ஓடி விட்டீர்கள். அவர்கள் போகட்டும். மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். இந்திய அரசு தடுப்பூசியை எல்லா மக்களுக்கும் சரியான நேரத்தில் போட்டிருந்தால் தற்போது நாட்டில் இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து