முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து முதலிடம் பிடித்தது

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லன்டன் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகக்கோப்பையை இங்கிலாந்து 2019-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விதங்களில் வென்று நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. பாவப்பட்ட எதிரணி நியூஸிலாந்து, ஆனால் இப்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து புதிய நம்பர் 1 அணியாகியுள்ளது.

4-ம் இடத்துக்குச் சரிந்த இங்கிலாந்து டி-20-யில் டாப் இடத்தை தக்கவைத்துள்ளது. டி-20யிலும் நியூஸிலாந்து 5-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. இந்த தரவரிசை 2017-18 போட்டி முடிவுகளை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. மே 2020 வரை விளையாடிய போட்டிகளுக்கு 50 % முக்கியத்துவம் கொடுத்தது. இதில் 2019 உலகக்கோப்பையும் அடங்கும்.

இதனையடுத்து வங்கதேசத்தை நியூஸிலாந்து 3-0 என்று தோற்கடித்ததால் நியூஸிலாந்து 121 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியா 115 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 3ம் இடத்துக்கு வந்தது. இங்கிலாந்து அணி இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் 4-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இலங்கையை ஓவர்டேக் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி 9-வது இடத்துக்கு வந்தது.

டி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவைக் காட்டிலும் 5 புள்ளிகள் கூடுதல் பெற்று முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்தும் ஆஸ்திரேலியாவை 2-1 என்றும் தென் ஆப்பிரிக்காவை 3-0 என்றும் இங்கிலாந்து வென்றதையடுத்து முதலிடத்தை தக்கவைத்தது. 

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை நியூஸிலாந்து அணி வென்று 5-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. டி-20 தரவரிசையில் ஆஸ்திரேலியா 3-ம் இடத்திலிருந்து 5-ம் இடத்துக்கு சரிந்தது. இலங்கையும் வங்கதேசமும் முறையே 8 மற்றும் 9-ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மேலும் சரிந்து 10-ம் இடத்துக்குச் சென்றது.

ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் 10-ம் இடத்திலும் டி-20-யில் 7-ம் இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் 6-ம் இடத்திலும் டி-20-யில் 4-ம் இடத்திலும் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தரவரிசையில் 5-ம் இடத்திலும் டி-20-யில் 6-ம் இடத்திலும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து