முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பிரேசில் கால்பந்து அணியில் நெய்மர் இடம் பெறவில்லை

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரேசிலியா : டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் பிரேசில் அணியிலிருந்து பிரபல வீரர் நெய்மர் நீக்கப்பட்டுள்ளார்.

68 கோல்கள்...

18 வயது முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், 107 ஆட்டங்களில் 68 கோல்களை அடித்துள்ளார். பீலேக்கு அடுத்ததாக அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர். 2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி தங்கம் வென்றது. 2018 உலகக் கோப்பைப் போட்டியிலும் பிறகு பங்கேற்றார். பாரிஸ் செயிண்ட் - ஜெர்மெய்ன் கிளப்பில் விளையாடி வரும் நெய்மர், உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.

18 பேர் அணி...

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான 18 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டது. இதில் நெய்மரின் பெயர் இடம்பெறவில்லை. ஜூன் 13 முதல் ஜூலை 10 வரை பிரேசிலில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் பிரேசில் அணி சார்பாக நெய்மர் விளையாடி வருகிறார். மேலும் ஒலிம்பிக்ஸ் போட்டி, ஃபிஃபாவின் அதிகாரபூர்வமான போட்டி இல்லை என்பதால் நெய்மரை ஒலிம்பிக்ஸ் போட்டியில் விளையாட பாரிஸ் செயிண்ட் - ஜெர்மெய்ன் அனுமதிக்கவில்லை. 

இடம்பெறவில்லை... 

இதுபோன்ற காரணங்களால் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான ஒலிம்பிக்ஸ் அணியில் நெய்மருக்கு இடம் கிடைக்கவில்லை. பிரேசில் அணியின் அடையாளமாக நெய்மர் உள்ளார். ஆனால் கோபா அமெரிக்கா போட்டியில் விளையாடி வருவதால் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை என பிரேசில் அணியின் நிர்வாகி பிரான்கோ தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் ஏமாற்றம்... 

நடால், நெய்மர் என இரு பிரபல சர்வதேச வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து