எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்க மத்திய அரசுக்குத் திட்டம் ஏதும் இல்லை என்றும், நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதன் காரணங்களைத் தருக. ஒருவேளை பள்ளி, கல்லூரிகளில் தேர்வை நடத்துவது என அரசு தீர்மானித்தால் அடுத்து வரும் மாதங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு உருவாக்கி இருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வைப் போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தருக. ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:- நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. 2021-ம் ஆண்டுக்கான நீட் இளங்கலை, முதுகலைத் தேர்வுகள் முறையே செப்டம்பர் 11, 2021 மற்றும் செப்டம்பர் 12, 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கெனப் பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் அவர்கள் சுலபமாகப் பயணிப்பதற்கான இ-பாஸைக் கொண்டிருக்கும். தேர்வு மையங்களுக்குள் நுழைவது, வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலை சோதிக்கப்படும். இயல்பு வெப்பநிலையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முகக் கவசம் அணிவது கட்டாயம். மேலும் முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும். தேர்வு மையத்திற்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் அல்லது மாநில அரசுகளே நடத்துகின்றன. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


