முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு: அமெரிக்கா முதலிடம் - சீனா - 2-ம் இடம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: கடந்த 17 நாட்களாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன்  நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் இந்திய அணிக்கு பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி வந்தார். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. சீனா, ஜப்பான் முறையை 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தன. இந்தியா 47-வது இடத்தை பிடித்துள்ளது.

நிறைவடைந்தது...

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தன. இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. கடைசி நாளான நேற்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன.

கலைநிகழ்ச்சிகள்... 

போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன்  நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றார். 

இந்திய அதிகாரிகள்...

நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 

அமெரிக்கா முதலிடம்...

விழாவின் முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா இரண்டாவது இடமும், போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

113 பதக்கங்கள்...

போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.  நேற்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.

ஜப்பான் 3-வது...

போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது.  ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 48வது இடத்தை பிடித்துள்ளது. 

BOX - 1

அடுத்த ஒலிம்பிக் போட்டி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் நடத்துவது வழக்கம். அந்த வகையில் 2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. சரியாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளது. சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சரியாக 1082 நாட்களில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது. அதாவது அடுத்த 2 வருடம், 11 மாதம் மற்றும் 2 வாரத்தில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது. இதற்கு முன்னதாக 1900 மற்றும் 1924-இல் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தரவரிசை நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் தரவரிசை

1 அமெரிக்கா 39 41 33 113 1

2 சீனா 38 32 18 88 2

3 ஜப்பான் 27 14 17 58 5

4 இங்கிலாந்து 22 21 22 65 4

5 ரஷியா 20 28 23 71 3

6 ஆஸ்திரேலியா 17 7 22 46 6

7 நெதர்லாந்து 10 12 14 36 9

8 பிரான்ஸ் 10 12 11 33 10

9 ஜெர்மனி 10 11 16 37 8

10 இத்தாலி 10 10 20 40 7

11 கனடா 7 6 11 24 11

12 பிரேசில் 7 6 8 21 12

13 நியூசிலாந்து 7 6 7 20 13

14 கியூபா 7 3 5 15 18

15 ஹங்கேரி 6 7 7 20 13

16 தென்கொரியா 6 4 10 20 13

17 போலந்து 4 5 5 14 19

18 செக் குடியரசு 4 4 3 11 23

19 கென்யா 4 4 2 10 25

20 நார்வே 4 2 2 8 29

21 ஜமைக்கா 4 1 4 9 26

22 ஸ்பெயின் 3 8 6 17 17

23 சுவீடன் 3 6 0 9 26

24 சுவிடசர்லாந்து 3 4 6 13 20

25 டென்மார்க் 3 4 4 11 23

26 குரோசியா 3 3 2 8 29

27 ஈரான் 3 2 2 7 33

28 செர்பியா 3 1 5 9 26

29 பெல்சியம் 3 1 3 7 33

30 பல்கேரியா 3 1 2 6 39

31 சுலோவேனியா 3 1 1 5 42

32 உஸ்பெகிஸ்தான் 3 0 2 5 42

33 ஜார்ஜியா 2 5 1 8 29

34 சீனா தைபே 2 4 6 12 22

35 துருக்கி 2 2 9 13 20

36 கிரீஸ் 2 1 1 4 47

36 உகாண்டா 2 1 1 4 47

38 இகுவடார் 2 1 0 3 60

39 அயர்லாந்து 2 0 2 4 47

39 இஸ்ரேல் 2 0 2 4 47

41 கத்தார் 2 0 1 3 60

42 பகாமாஸ் 2 0 0 2 66

42 கொசோவா 2 0 0 2 66

44 உக்ரைன 1 6 12 19 16

45 பெலாரஸ் 1 3 3 7 33

46 ரொமானியா 1 3 0 4 47

46 வெனிசுலா 1 3 0 4 47

48 இந்தியா 1 2 4 7 33

49 ஹாங்காங் 1 2 3 6 39

50 பிலிப்பைன்ஸ் 1 2 1 4 47

50 சுலோவாகியா 1 2 1 4 47

52 தென் ஆப்பிரிக்கா 1 2 0 3 60

53 ஆஸ்திரியா 1 1 5 7 33

54 எகிப்து 1 1 4 6 39

55 இந்தோனேசியா 1 1 3 5 42

56 எதோப்பியா 1 1 2 4 47

56 போர்ச்சுக்கல் 1 1 2 4 47

58 துனிசியா 1 1 0 2 66

59 எஸ்தோனியா 1 0 1 2 66

59 பிஜி 1 0 1 2 66

59 லாட்வியா 1 0 1 2 66

59 தாய்லாந்து 1 0 1 2 66

63 பெர்முடா 1 0 0 1 77

63 மொராக்கோ 1 0 0 1 77

63 போர்டோ ரிகோ 1 0 0 1 77

66 கொலம்பியா 0 4 1 5 42

67 அஜர்பெய்ஜான் 0 3 4 7 33

68 டொமினிக் குடியரசு 0 3 2 5 42

69 அர்மினியா 0 2 2 4 47

70 கிர்கிஸ்தான் 0 2 1 3 60

71 மங்கோலியா 0 1 3 4 47

72 அர்ஜென்டினா 0 1 2 3 60

72 சான் மரினோ 0 1 2 3 60

74 ஜோர்டான் 0 1 1 2 66

74 மலேசியா 0 1 1 2 66

74 நைஜீரியா 0 1 1 2 66

77 பஹ்ரைன் 0 1 0 1 77

77 சவுதி அரேபியா 0 1 0 1 77

77 லிதுனியா 0 1 0 1 77

77 வட மெக்டோனியா 0 1 0 1 77

77 நமிபியா 0 1 0 1 77

77 துர்க்மெனிஸ்தான் 0 1 0 1 77

83 கஜகஸ்தான் 0 0 8 8 29

84 மெக்சிகோ 0 0 4 4 47

85 பின்லாந்து 0 0 2 2 66

86 போட்ஸ்வானா 0 0 1 1 77

86 பர்கினியா பசோ 0 0 1 1 77

86 ஐவோரி 0 0 1 1 77

86 கானா 0 0 1 1 77

86 கிரெனடா 0 0 1 1 77

86 குவைத் 0 0 1 1 77

86 மொல்டோவா குடியரசு 0 0 1 1 77

86 சிரியா அரபு குடியரசு 0 0 1 1 77

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து