முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு டிராவிட் மீண்டும் விண்ணப்பம்

செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பி.சி.சி.ஐ. இதனை அடுத்து அந்த பொறுப்புக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்கவுள்ளார்.

என்.சி.ஏ. தலைவர்...

முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய-ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். 2019-ல் பெங்களூரில் உள்ள பி.சி.சி.ஐயின் நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார். 

விண்ணப்பிக்கிறார்...

பி.சி.சி.ஐ விதிமுறைகளின்படி என்.சி.ஏ. தலைவராக ராகுல் டிராவிட் 2 வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து என்.சி.ஏ. தலைவர் பதவிக்கான புதிய விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பி.சி.சி.ஐ. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 15. இதையடுத்து என்.சி.ஏ. தலைவராக மீண்டும் பணியாற்ற பி.சி.சி.ஐக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

60 வயது வரை...

என்.சி.ஏ. தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ரவி சாஸ்திரியின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி, டி-20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. 60 வயது வரை மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற முடியும். ரவி சாஸ்திரிக்குக் கடந்த மே மாதம் 59 வயது முடிந்தது. 

தலைமைப் பயிற்சி...

எனவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பி.சி.சி.ஐ அமைப்பில் ஏதாவதொரு பெரிய பொறுப்பில் டிராவிட் நிச்சயம் இருப்பார் என பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து