முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை போட்டி: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கம்மின்சுக்கு இடம்

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கான்பராக்: டி-20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்சுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணிக்கு அனுப வீரர் ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

12 அணிகள் தகுதி...

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன.

கொரோனா பாதிப்பு...

மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இரண்டு குரூப்...

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐ.சி.சி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான டி-20 அணியை நியூசிலாந்து அறிவித்துவிட்டது. 

ஆஸி. அணியில்...

இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்திருக்கிறது. டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் நிலையில் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆஸி. அணி வீரர்கள்...

 ஆஸ்திரேலிய அணி வருமாறு., ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ், டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ்.

இதில் டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து