முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் (இருவரும் இங்கிலாந்து) ஆகியோர் விலகிய நிலையில் இப்போது மேலும் ஒரு அடியாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரும் (இங்கிலாந்து) எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக 30 வயதான பட்லர் தெரிவித்தார். பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்சை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 24 வயதான கிளென் பிலிப்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 46 பந்துகளில் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) சதம் விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!