முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.35,616-க்கு விற்பனையானது. 

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வந்தாலும் பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியபடி இருந்தது.  கடந்த 4-ம் தேதி ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து குறைந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.35 ஆயிரத்து 776-க்கு விற்கப்பட்டது.

நேற்று 3-வது நாளாக தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4,452-ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக இருந்தது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த மாதம் தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து