விநாயகர் சதுர்த்தி: பெங்களூருவில் இருந்து வெளிமாநிலத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

ksrtc bus-2021-09-08

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி இன்று 9-ம் தேதி பெங்களூருவில் இருந்து கூடுதலாக 1,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் (மெஜஸ்டிக்) இருந்து தர்மஸ்தாலா, குக்கே சுப்பிரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாப்புரா, சிருங்கேரி, ஒரநாடு, தாவணகெரே, உப்பள்ளி, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாதகிரி, பீதர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதுபோல மைசூரு ரோட்டில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட்டை, குசால்நகர், மடிகேரி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயங்குகிறது. பெங்களூரு சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், திருப்பதி, விஜயவாடா, ஐதராபாத் உள்பட தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயங்குகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்ய ksrtc.karnataka.gov.in என்ற இணையதள முகவரியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கர்நாடகத்திலும், அண்டை மாநிலங்களிலும் கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 685 டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து