முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ் ஓபன் பெண்கள் ஒற்றையர் இறுதி: 'லேலா - எம்மா ரடுகானு' இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

 

நியூயார்க்: யு.எஸ். ஓபன் போட்டியில் இரு பதின்ம வயது வீராங்கனைகள் அரையிறுதி ஆட்டங்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் லேலா மற்றும் எம்மா ரடுகானு பலப்பரீட்ச்சை நடத்துகின்றனர்.

லேலா பெர்ணான்டஸ்... 

தரவரிசையில் 73-ம் இடத்தில் உள்ள 19 வயது லேலா, 3-வது சுற்றில் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். பிறகு, 4-வது சுற்றில் பிரபல வீராங்கனையும் 2016 யு.எஸ். ஓபன் சாம்பியனுமான ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பரையும் காலிறுதியில் உலகின் நெ.5 வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவையும் வீழ்த்தி டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அரினாவை வீழ்த்தி...  

இப்போது அரையிறுதியில்  உலகின் நெ.2 வீராங்கனை அரினா சபலேன்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் லேலா. அரையிறுதியில் 7-6(3), 4-6, 6-4 எனக் கடுமையாகப் போராடி அரினாவை வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

லேலா சாதனை...

1999 யு.எஸ். ஓபன் போட்டியில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகளை வீழ்த்தினார் செரீனா வில்லியம்ஸ். அதன்பிறகு கிரான்ட்ஸ்லாம் போட்டியில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகளை வீழ்த்திய இளம் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார் லேலா.

எம்மா ரடுகானு...

மற்றொரு மகளிர் அரையிறுதியில் இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானு, நெ.18 வீராங்கனையான கிரீஸின் மரியாவை  6-1, 6-4 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார். தரவரிசையில் 150-வது இடத்தில் உள்ள எம்மா ரடுகானு, தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதுவே முதல்முறை...

ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் தகுதிச்சுற்றில் விளையாடிய ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு நுழைவது இதுவே முதல்முறை. மேலும் இதுவரை ஒரு செட்டும் இழக்காமல் வெற்றியடைந்து வருகிறார். இதனால் இறுதிச்சுற்று லேலாவுக்குச் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செரீனா பட்டம்...

1999 யு.எஸ். ஓபன் போட்டியில் பதின்ம வயதினரான செரீனா வில்லியம்ஸூம் (17) மார்டினா ஹிங்கிஸூம் (18) மோதினார்கள். செரீனா பட்டம் வென்றார். அதன்பிறகு யு.எஸ். ஓபன் போட்டியில் இப்போது தான் இரு பதின்ம வயதினர் இறுதிச்சுற்றில் மோதுகிறார்கள்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து