முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் நிலவரம் குறித்து ஐ.எஸ்.ஐ., ஆலோசனை சீனா, ரஷ்யா, பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அது தொடர்பாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் ஜெனரல் பைஸ் ஹமீது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், சீனா, ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், மற்றும் துர்க்மெனிஸ்தான் நாட்டு உளவுத்துறை தலைவர்கள் கலந்து கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இது தொடர்பாக எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில் ஆப்கன் சூழ்நிலை மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு எப்படி ஒத்துழைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

சில பாகிஸ்தான் மீடியாக்கள், சீனா, ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டு உளவுத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர் என செய்தி வெளியிட்டுள்ளன.வேறு சில ஊடகங்கள், மேற்கண்ட நாடுகளின் உளவுத்துறை சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து