முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு உங்களிடமிருந்து உந்து சக்தி பெற்றேன் என பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் சாதனைகளால் இந்தியாவின் நற்பெயர் மேலும் உயர்ந்திருப்பதாக பெருமிதத்துடன்  தெரிவித்தார். 

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்த நிலையில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்த  பிரதமர் மோடி, அவர்களின் போராட்டங்கள், வாழ்க்கை பயணங்கள் குறித்து கேட்டறிந்தார். பல்வேறு வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமருக்கு அளித்தனர்.  அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பாராட்டு விழாவில், தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, உங்களிடமிருந்து உந்து சக்தி பெற்றுள்ளேன். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை தீவிரமாக எடுத்து கொள்வதற்கு நீங்கள் படைத்துள்ள சாதனை உத்வேகம் அளிக்கும். நாடு முழுவதும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு வேகமாக அதிகரிக்க உங்களின் சாதனை உதவியுள்ளது. 

உண்மையான விளையாட்டு வீரர் என்பவர் வெற்றியை கண்டோ தோல்வியை கண்டோ ஒரு இடத்தில் சிக்கி கொள்ள மாட்டார். முன்னேறி கொண்டே இருப்பார். நாட்டின் தூதர்களாக நீங்கள் மாறியுள்ளீர்கள். உங்களின் சாதனையால் உலகளவில் நாட்டின் கெளரவத்தை உயர்த்தியுள்ளீர்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து