முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லாவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக கோலியே நீடிப்பார்: பி.சி.சி.ஐ

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என்று தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக  உள்ளதாக தகவல் வெளியானது.  தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ்  ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

பி.சி.சி.ஐ மறுப்பு...

அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது  பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. பி.சி.சி.ஐயின் பொருளாளர் அருண் துமால், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள்,20 ஓவர்  அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி இந்திய கிரிக்கெட்  விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு  (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் அவர் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது விராட் கோலி டெஸ்ட் கேப்டன் ஆனார். 2017-ம் ஆண்டு டோனி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

ஐ.சி.சி. கோப்பை...

பிரபல பேட்ஸ்மேனான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐ.சி.சி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலி 95 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 65-ல் வெற்றி கிடைத்துள்ளது. 27 போட்டிகளில் தோற்றது. 2 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 45 இருபது ஓவர் போட்டியில் 29-ல் இந்தியா வெற்றி பெற்றது. 14-ல் தோல்வி ஏற்பட்டது. 2 போட்டி முடிவு இல்லை.

ஐ.பி.எல். போட்டி...

 

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 132 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 62-ல் வெற்றி பெற்றார். 66 போட்டிகளில் தோற்றார். 4 ஆட்டங்கள் முடிவு இல்லை. ஆனால் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து