சர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடால் 6-வது இடத்திற்கு சறுக்கல்

Rafel-Nadal 2021 09 14

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்குப் பிறகு விளையாடாமல் இருக்கும் முன்னணி வீரரான ரபேல் நடால், தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

20 கிராண்ட் ஸ்லாம்...

டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் ரபேல் நடால். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

பின்தங்கினார்...

அதில் இருந்து தற்போது வரை ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் களம் இறங்காமல் உள்ளார். இதனால் உலக டென்னிஸ் தரவரிசையில் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 

மெட்வதேவ்...

 

அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டாலும், ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். டொமினிக் தீம் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அமெரிக்க ஓபனை வென்ற ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் 2-வது இடத்திலும், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்திலும்  உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து