இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கும்ப்ளேவா - வி.வி.எஸ் லட்சுமணனா? விரைவில் அறிவிக்கிறது பி.சி.சி.ஐ

VVS-Laxman---Kumble-2021-09

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக போவது அனில் கும்ப்ளேவா அல்லது வி.வி.எஸ் லட்சுமணனா என்பது குறித்து விரைவில் பி.சி.சி.ஐ அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை... 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. டி-20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.

ராகுல் டிராவிட்...

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்தில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் உள்ளார்.

இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் கேப்டன் கும்ப்ளே, முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை கிரிக்கெட் வாரியம் அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சியாளராக இருக்குமாறு இருவரிடமும் கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

பதவி விலகல்...

2016-17-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார் அனில் கும்ப்ளே. விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரால் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க முடியவில்லை. எனினும் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பதவி விலகினார்.

வி.வி.எஸ். லட்சுமணன் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து உள்ளார். இருவருமே 100 டெஸ்டுக்கு மேல் விளையாடி உள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவரை பயிற்சியாளராக நியமிப்பது என்பது 2-வது கட்ட கருத்தாகவே உள்ள நிலையில் நல்ல அனுபவம் வாய்ந்த இவர்கள் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. புதிய பயிற்சியாளர் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கும்ப்ளேயும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு லட்சமணும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். இருவரையும் பி.சி.சி.ஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அணுகும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருத்தம் செய்ய... 

பி.சி.சி.ஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறிய விஷயத்தில் இப்போது திருத்தம் செய்ய வேண்டும். கோலியின் அழுத்தம், நெருக்கடியால்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார் என்பது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கும் தெரியும். இனிமேல் அது முன்னுதாரணமாக இருக்ககூடாது.

ரவிசாஸ்திரி பதவிக்காலம் டி20உலகக் கோப்பையுடன் முடிந்தபின், தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்படும்” எனத் தெரிவித்தார்

மேலும், பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறுகையில் “ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம், பயிற்சியாளர் அனுபவம் ஆகிய கொண்டதில் கும்ப்ளே, லட்சுமண் ஆகியோர் முதல் வாய்ப்பாக இருக்க முடியும். வெளிநாட்டு பயிற்சியாளர் 2-வது வாய்ப்புதான். கிரிக்கெட்டில் நல்ல டிராக் ரெக்கார்டு இருப்பவர்களும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

 

விக்ரம் ரத்தோர்கூட விருப்பமாக இருந்தாலும், அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை, இது தலைமைப் பயிற்சியாளர் பதவி, ஆனால் ரத்தோருக்கு இருக்கும் தகுதிக்கு துணைப்பயிற்சியாளராக இருக்கத்தான் சிறந்தவர்” எனத் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து