முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோழியை கொன்ற வழக்கில் தீர்ப்பு அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் குற்றவாளி

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கோடீஸ்வர ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், தனது தோழியை கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக திகழ்ந்தவர் ராபர்ட் டர்ஸ்ட். இவர் தனது நெருங்கிய தோழி சூசன் பெர்மானை 2000-ம் ஆண்டில் கொலை செய்து விட்டார். 

தனது மனைவி கேத்லீன் மாயமானது தொடர்பாக போலீசிடம் எதுவும் கூறிவிடக்கூடாது என்பதற்காக ராபர்ட் டர்ஸ்ட், தனது தோழி சூசனை கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரம் அடுத்த மாதம் 18-ந் தேதி அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து