முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல் சீசனோடு ஆர்.சி.பி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் கோலி

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூரு : நடப்பு ஐபிஎல் சீசனுக்கு பின்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் அடுத்தடுத்த சீசன்களில் வீரராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதிப்பளிக்கிறோம்... 

“விராட் கோலி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஆர்.சி.பி அணியின் சொத்து. அவரது தொழில்முறை ஆட்டத்தின் நேர்த்தியும், கேப்டன்சியும் மிகவும் அற்புதமானது. அவரது முடிவை நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதோடு அதனை ஆதரிக்கவும் செய்கிறோம். அவரது தலைமை பண்புகக்கு ஆர்.சி.பி தலை வணங்குகிறது. அடுத்த சீசன் முதல் அவர் அணியின் சீனியர் வீரராக தொடருவார்” என பெங்களூர் அணியின் தலைவர் பிராத்மேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

அற்புதமானது...

“ஆகச்சிறந்த திறன் படைத்த ஆர்.சி.பி அணியை வழி நடத்திய பயணம் மிகவும் அற்புதமானது. அணியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த முடிவை சுலபமாக எடுக்கப்பட்டது இல்லை. எனது நெஞ்சுக்கு மிகவும் பெங்களூர் அணி நெருக்கமானது. நான் இதற்கு முன்னதாக சொல்லியதில் உறுதியாக இருக்கிறேன். அது எனது ஓய்வு காலம் வரையில் நான் ஆர்.சி.பி அணிக்காக தான் விளையாடுவேன்” என கோலி தெரிவித்துள்ளார். 

இந்திய டி-20 அணி...

சில தினங்களுக்கு முன்னதாக இந்திய அணியை டி20 போட்டியில் வழிநடத்தும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதித்தது என்ன ?

2008-ல் யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆர்.சி.பி அணிக்குத் தேர்வானார் விராட் கோலி. 2013 முதல் அந்த அணியின் கேப்டனாக உள்ளார். 

ஆர்.சி.பி கேப்டனாக...

1) ஆட்டங்கள் -  132,வெற்றி - 62, தோல்வி - 66, முடிவு இல்லை - 4.

எடுத்த ரன்கள்...

ரன்கள் - 4674, சராசரி - 43.27, ஸ்டிரைக் ரேட் - 134.11, சதங்கள் - 5, அரை சதங்கள் - 33.

முக்கிய நிகழ்வுகள்...

* 2016-ல் ஆர்.சி.பி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

* இதுதவிர, 2015, 2020-ம் ஆண்டுகளில் ஆர்.சி.பி அணி ஃபிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 

* கோலி தலைமையில் ஆர்.சி.பி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து