முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்: எடப்பாடி

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் என்று திருப்பத்தூரில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைப் பொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. 

அக்கட்சி அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது.

சட்டசபை தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை அறிவித்தது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அறிவித்து அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.  

 

தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும்.  நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து