முக்கிய செய்திகள்

புள்ளிகள் பட்டியலில் மாற்றம்

ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியும், டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மும்பை வெற்றி...

அபுதாபியில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது. மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். பும்ரா, பொலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

டெல்லி வெற்றி....

மற்றொரு ஆட்டத்தில் டெல்லியை கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு ஆட்டங்களாலும் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை அணி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 4-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 5-ம் இடத்தில் இருந்த பஞ்சாப் 6-ம் இடத்துக்கும் 6-ம் இடத்தில் இருந்த ராஜஸ்தான் 7-ம் இடத்துக்கும் இறங்கியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து