முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் 23.40 கோடியை தாண்டிய ' கொரோனா ' பாதிப்பு

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.08 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,40,21,367 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,08,43,861 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 87 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றுக்கு தற்போது 1,83,90,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,727 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

  1. அமெரிக்கா  -  பாதிப்பு-  4,41,90,231, உயிரிழப்பு -  7,13,866, குணமடைந்தோர் - 3,36,22,630
  2. இந்தியா   -      பாதிப்பு - 3,37,38,188, உயிரிழப்பு -  4,48,090, குணமடைந்தோர் - 3,30,07,285
  3. பிரேசில்   -      பாதிப்பு - 2,13,99,546, உயிரிழப்பு -  5,96,163, குணமடைந்தோர் - 2,04,04,701
  4. இங்கிலாந்து - பாதிப்பு -  77,71,294,  உயிரிழப்பு -  1,36,525, குணமடைந்தோர் -   62,92,234
  5. ரஷ்யா           -   பாதிப்பு -  74,87,138, உயிரிழப்பு -  2,06,388, குணமடைந்தோர் -   66,53,941

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து