முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க இடைத்தேர்தல்: மம்தா போட்டியிடும் பவானிபூரில் அமைதியான வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

 

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 53.32 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி, தான் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் போட்டியிடாமல், தனக்கு சவால் விட்ட பா.ஜ.க வேட்பாளரும், முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்தவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் திரிணமூல் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் முதல்வராக மம்தா பொறுப்பேற்றார். முதல்வா் பதவியைத் தக்கவைக்க அவா் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்.எல்.ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பவானிபூா் மற்றும் காலியாகவுள்ள ஜாங்கிபூா், சம்சோ்கஞ்ச் தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

காலை 11 மணிநிலவரப்படி, பவானிபூரில் 21.73 சதவீதம், சம்சோ்கஞ்ச் 40.23 சதவீதம், ஜாங்கிபூா்  36.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பிறகு மாலை 5 மணி நிலவரப்படி 53.32 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் சம்சோ்கஞ்ச் தொகுதியில் 78.60 சதவீதமும்,  ஜாங்கிபூா் தொகுதியில் 76.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் ஒடிஷா மாநிலத்தில் பிபிலி சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 59.72 சதவீத வாக்குகள் பதிவாயிருந்தன.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் மூத்த வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிடுகிறார். பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 4 hours ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து