முக்கிய செய்திகள்

கல்விக் கண் திறந்த காமராஜரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      தமிழகம்
Stelin 2021 09 27

Source: provided

சென்னை : கல்விக் கண் திறந்த காமராஜரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது என, காமராஜரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய, 'கர்ம வீரர்', 'கல்விக்கண் திறந்தவர்' என போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜர், கடந்த அக். 02, 1975-ம் ஆண்டு காலமானார். காமராஜரின் நினைவு நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தியும், அவரை நினைவுகூர்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், காமராஜர் நினைவு தினம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில், "எளிமையின் உருவம் - ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள்! கல்விக் கண் திறந்த அவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது! பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம்!" என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து