முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

153-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

கதர் நூல்களால் ஆன மாலையும் ரோஜாப்பூ மாலையும் அவருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது சிலையின் கீழ் பகுதியில் உருவப்படம் வைக்கப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 7.50 மணிக்கு வந்தார். அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி 7.57 மணிக்கு வருகை தந்தார். கவர்னரை, மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து சரியாக 8 மணிக்கு கவர்னர் ஆர்.என் ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் சென்னை சர்வோதைய சங்கம் சார்பில் நடந்த இராட்டை நூற்பு மற்றும் பக்தி பாடல் பஜனையை பார்த்து ரசித்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆர்.காந்தி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சர்வோதய சங்க மாணவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி எம்.எஸ்.ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் மற்றும் முதல்வர் வருகையையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் மட்டும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மகாத்மா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து