முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையமைக்கும் 1417-வது படம்.

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிப்படங்கள் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்த நிலையில் 1417 படமாக ‘நினைவெல்லாம்  நீயடா’ என்கிற படம் உருவாகிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆதிராஜன். இவர் சிலந்தி, ரணதந்த்ரா  அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர். லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார்.

கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் யுவலஷ்மி, அபிநயஸ்ரீ,மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து