முக்கிய செய்திகள்

வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் : மேற்குவங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

election-commission-2021-09-09

Source: provided

கொல்கத்தா : வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேற்குவங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பவானிப்பூர் தொகுதியில் முதல்வர் மம்தா பேனர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் ,மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகும் வெற்றி கொண்டாட்டம் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு  மேற்கு வங்க அரசுக்கு  தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ, ஊர்வலமோ நடைபெறக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து