முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணைந்தது பெரிய குற்றம்: மொட்டையடித்து பா.ஜ.க.வில் இருந்து விலகிய திரிபுரா எம்.எல்.ஏ.

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

பா.ஜ.க.வில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன் என திரிபுரா மாநில எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

திரிபுரா மாநில சூர்மா தொகுதியின் எம்.எல்.ஏவாக  இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில்  இவர் மேற்குவங்காள மாநிலம்  சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாஸ் மொட்டையடித்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

 

பா.ஜ.க. நாடு முழுவதையும் விழுங்குகிறது. நான் பா.ஜ.க.வின் ஒரு பகுதியாக மாறியதன் மூலம் ஒரு குற்றத்தை செய்ததாக உணர்கிறேன். இது நான் செய்த தவறு. நான் காளி  கோவிலில் பூஜை செய்தேன். பா.ஜ.க.வில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். இந்த தீய சக்தியை அழிக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். மேலும் பா.ஜ.கவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்.எல்.ஏக்களும் விலகுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன்” என  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து