முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பதால் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

 

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து