முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் தான் ஓப்பனர்: இஷான்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

வரும் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரையில் ஓமன் மற்றும் அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷன் களம் இறங்குவார் என அவரே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி இந்த உறுதியயை அவரிடம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

“எனக்கு ஓப்பனிங் விளையாட மிகவும் பிடிக்கும். அதையே தான் விராட் கோலியும் சொல்லியுள்ளார். உலகக் கோப்பை மாதிரியான பெரிய ஈவெண்டுகளில் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் பார்முக்கு திரும்பியுள்ளது எனக்கும், அணிக்கும் நல்லது. அதுவும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்துள்ளது கூடுதல் சிறப்பு” என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியில் மாற்றம்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்தநிலையில் 20 ஓவர் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே அணியில் இடம் பெற்ற பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா, துணை விக்கெட் கீப்பர் அசம்கான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்சைன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். ஹைதர் அலி, சர்பராஸ் அகமது, பஹர் ஜமான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கே.எஸ்.பரத்திற்கு கோலி பாராட்டு 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது., இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது. இந்த போட்டியால் நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும். புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது நல்லதாகும்.

இந்த சீசனில் அவர்களை (டெல்லி) நாங்கள் 2 முறையும் தோற்கடித்து உள்ளோம். டிவில்லியர்ஸ், கே.எஸ்.பரத் ஜோடி முதலில் நன்றாக விளையாடியது. பின்னர் மேக்ஸ்வெல்-கே.எஸ்.பரத் ஜோடியின் பாட்னர்ஷிப் அருமையானது. கே.எஸ்.பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3-வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வாறு கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து