முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலிக்கு லாரா ஆதரவு

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

நடப்பு ஐபிஎல் சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் தோல்வியை தழுவியாதல் தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இனி அடுத்த சீசன் முதல் கோலி, ஒரு வீரராக பெங்களூர் அணியில் விளையாட உள்ளார். 

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, கோலியின் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன் என தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இரு வேறு நபராக நான் பார்க்கிறேன். மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்குச் சிக்கல்

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரர்களாக அவேஷ் கானும் வெங்கடேஷ் ஐயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாது. டெல்லி வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான், 15 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேகேஆர் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், 8 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 265 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.25. மேலும் சில ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்குத் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணியில் மாற்றம் 

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அணியில் உள்ள ஹர்த்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.

 

இதனால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டோனி, கேப்டன் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் விரைவில் ஆலோசனை செய்து முடிவை அறிவிக்கிறார்கள். தேர்வு குழுவினருடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு அணி மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல் (பெங்களூர்), வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி (கொல்கத்தா) ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து