முக்கிய செய்திகள்

பா.ஜ.கவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை: அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      ஆன்மிகம்
Sekar-Babu-2021-09-29

பா.ஜ.கவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

 

தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., பா.ஜ.கவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது. கோவில் குடமுழுக்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என்றார். மேலும்,  புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனத்துக்கு  இனி எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாது எனவும் சேகர்பாபு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து