முக்கிய செய்திகள்

14-வது ஐ.பி.எல் கிரிக்கெட்: ருதுராஜூக்கு ஆரஞ்சு தொப்பி, ஹர்ஷலுக்கு பர்பிள் தொப்பி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      விளையாட்டு
Herschel-Patel--2021-10-16

ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்த ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 32 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் படேலுக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது.

60 ஆட்டங்கள்...

 

ஐபிஎல் 14-வது சீசனில் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 15 போட்டிகளில் 32 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து