முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரடி வகுப்புகளில் கிடைக்கும் பயன் ஆன்லைன் கல்வி தராது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது என்று இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதல்வர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இல்லம் தேடி கல்வித் திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி புகட்டும். நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டங்களையும் கொண்டு வருகிறோம்.

திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள்தான் திராவிடம். ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையை மாற்றிய ஆட்சி, திராவிட ஆட்சி. ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு பலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து