முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி: தொற்று எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜிகா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியது. உத்தரப் பிரதேசத்தில் ஜிகா மேலாண்மைக்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கான்பூர் நகரில் புதிதாக 30 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது.  

ஒரு மனிதரின் உடலுக்குள் ஜிகா வைரஸ் வந்து விட்டால் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் மட்டுமே ஆற்றலுடன் இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாளிலேயே அறிகுறிகள் தென்பட்டுவிடும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தடிப்புகள், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுக்களில் வலி, உடல்சோர்வு ஆகியவற்றை உணர்வதாகச் சொல்கிறார்கள். இதில் உடல் தடிப்பு போக, பிற அறிகுறிகள் கொரோனாவோடு ஒத்துப்போவதால் நோய்த் தொற்றாளர், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா அல்லது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா எனத் தடுமாறுவது உண்டு.

 

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஜிகா வைரஸ் அடிப்படைக் குணநலன்களில் முற்றாக மாறுபட்டது. கொரோனாவைப் போல் தொற்றுக்குள்ளானவரைத் தொடுவதால் ஜிகா வைரஸ் பரவாது. காற்றிலும் பரவாது. கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலமே ஜிகா வைரஸிடமிருந்து தப்ப முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து