முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை மீறி பட்டாசு வெடிப்பு: தலைநகர் டெல்லியில் அபாயகர அளவை தொட்ட காற்று மாசு

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : தடையை மீறி பட்டாசு வெடித்ததன் காரணமாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளியன்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய அளவை எட்டியுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து 'அபாயகம்’ என்ற அளவை எட்டியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து