முக்கிய செய்திகள்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

Source: provided

சென்னை : கோவை போலீஸ் கமிஷனர், நெல்லை, திருச்சி, வேலூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

 

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக தீபக் எம். தமோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், மேலும் கோவை போலீஸ் கமிஷனராக பிரதீப் குமாரும்,  சென்னை போலீசின் கிழக்கு சட்டம் ஒழுங்குப்பிரிவு இணை கமிஷனராக எஸ்.பிரபாகரனும்,  சென்னை போலீசின் தெற்கு , 

போக்குவரத்து இணை கமிஷனராக ராஜேந்திரனும்,  சி.பி.சி.ஐ.டி.யில் சிறப்பு விசாரணை பிரிவு எஸ்.பி.,யாக மூர்த்தியும்,  திருச்சி எஸ்.பி.,யாக சுஜித் குமாரும், வேலூர் எஸ்.பி.,யாக ராஜேஷ் கண்ணனும், நெல்லை எஸ்.பி.,யாக சரவணனும், புளியந்தோப்பு உதவி கமிஷனராக மணிவண்ணனும், சென்னை, உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து