முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் எச்சரிக்கையை நேட்டோ மிக சாதாரணமாக எடுத்து கொள்கிறது: புடின்

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ரஷ்யாவின் எச்சரிக்கையை நேட்டோ மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா சட்டவிரோதமாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 90 ஆயிரம் வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துள்ளன. நேட்டோ படையின் குண்டு வீசும் விமானங்கள் உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  மேலும், அந்த விமானங்கள் உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் பறக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த செயல் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடம் என்ற நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், எச்சரிக்கையை நேட்டோ மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.  வெளியுறவுக் கொள்ளைகள் தொடர்பாக தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்வில் பேசிய அதிபர் புடின், அமெரிக்காவுடனான உறவு திருப்திகரமாக இல்லை. ஆனாலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.  

நேட்டோ படையின் குண்டு வீசும் விமானங்கள் ரஷ்ய எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பறக்கின்றன. இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளோம். ரஷ்யாவின் எச்சரிக்கையை (சிவப்பு கோடு) நேட்டோ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. இது பேச்சுவார்த்தைக்கான அனைத்து நடைமுறைகளையும் அழிக்கக்கூடும் என்று  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து