முக்கிய செய்திகள்

வீடு இடிந்ததில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      தமிழகம்
Stalin 2021 10 25

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய்  50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து