முக்கிய செய்திகள்

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Corona 2021 11 28

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,25,467 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,25,467ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 772 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,80,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று  மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,463 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 02 பேரும், அரசு மருத்துவமனையில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 557822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் நேற்று  மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 446 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 8,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து