முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சேலம் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டடம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. 

இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலர்கள், பகுதி, ஒன்றிய, நகர செயலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள், வட்ட, கிளை செயலாளர்கள், இளைஞர்- இளம்பெண் பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி சேலம் மாநகர போலீசார் 1000-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து