முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இருபது யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்திய இறையாண்மைக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி முதன் முறையாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில்  நயா பாகிஸ்தான் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. 20 லட்சம் பின் தொடர்பவர்களுடன் செயல்படும் அந்த யூடியூப் சேனல் பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறை உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை பதிவிட்டு வருகிறது. 

காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், அயோத்தியா உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொய்யான தகவல்களை பதிவிட்டு வருவதை அறிந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அந்த சேனலை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு யூடியூப் நிர்வாகம் மற்றும் தொலை தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து நயா பாகிஸ்தான் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 19 யூடியூப் சேனல்களும் மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.  இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 கோடி வரை இருக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க.அரசு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து