முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டு சேர்க்கையாக வருகிறதாம் புதிய வகை வைரஸ் டெல்மைக்ரான்

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : 2022-ம் ஆண்டின் மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்க டெல்மைக்ரான் என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே இந்த டெல்மைக்ரான். இது ஒமைக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது.

டெல்டா வகை கொரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.  ஒமைக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் அதே வேளையில், டெல்டா வகை கொரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் தீவிரம்காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மகராஷ்டிர மாநில கொரோனா சிறப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி கூறுகையில், டெல்மைக்ரான், டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையாக உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து