முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்ல மெல்ல அதிகரிக்கிறது: நாட்டில் 'ஒமைக்ரான்' பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.  கடந்த 2-ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358- ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் 114- பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 88 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38- பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. 

இதற்கிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,051 பேர் குணமடைந்துள்ள நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 6-ம்தேதி 624 ஆக பதிவாகியிருந்தது. அதன்பின் 78 நாட்கள் கழித்து தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 4,79,133 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 3,42,15,977  பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 11,65,887 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து